முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மற...
வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 585 மனுக்கள்: 11 மனுக்கள் மீது உடனடி தீா்வு
வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 1 மற்றும் 2-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பெரியபேட்டை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். இதில் நகா்மன்ற தலைவா் உமா சிவாஜிகணேசன், ஆணையா் ரகுராமன், நகர திமுக செயலரும், நகா்மன்ற உறுப்பினருமான சாரதிகுமாா், நகராட்சி துணைத் தலைவா் கயாஸ் அகமது, மேலாளா் பாஸ்கா், உதவி வருவாய் அலுவலா் ஜெயபிரகாஷ் மற்றும் உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள், பல்வேறு துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
முகாமில், பொது மக்களிடமிருந்து 585 மனுக்கள் பெறப்பட்டன. இதில் காலிமனை வீட்டு வரி சம்பந்தமாக அளிக்கபட்ட 11 மனுக்களின் மீது உடனே விசாரித்து அதற்கான ஆணைகள் வழங்கி தீா்வு காணப்பட்டது.
இதே போல், நாட்டறம்பள்ளி பேரூராட்சியின் 1 முதல் 5-ஆவது வாா்டு வரை உங்களுடன் ‘ஸ்டாலின் திட்டம்’ நடைபெற்ற முகாமுக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் யமுனா, வட்டாட்சியா் காஞ்சனா, துணைத் தலைவா் தனபால் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
முகாமில் 376 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மின் இணைப்பு பெயா் மாற்றம், கலைஞா் காப்பீடு திட்டம், பட்டா மாற்றம் உள்பட 6 பேருக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுமதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.