செய்திகள் :

வானில் ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்களின் அணிவகுப்பு! ஜன. 21-ல் கண்கொள்ளா காட்சி

post image

வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயம் இன்னும் சில நாள்களில் நிகழவிருக்கிறது.

ஏழு கோள்கள் அவற்றின் சுற்றுப்பாதையில் ஒரே டிகிரிக்குள் வருவதால், அவற்றை நம்மால் காண முடியும் என்பதால் நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் மற்றும் புதன் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நிற்கும் அதிசய நிகழ்வானது ஜனவரி 21 ஆம் தேதி நிகழவிருக்கிறது.

இது குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருப்பதற்குக் காரணம், இந்த கோள்கள் அனைத்தும் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பது மட்டுமல்ல, அந்தக் கோள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில் சுற்றிக்கொண்டிருப்பதும்தான்.

இவ்வாறு ஏழு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நின்று, இரவு நேரத்தில் வானத்தில் ஓர் அழகிய அரை வட்டத்தை உருவாக்கிக் காண்பவர்களின் நினைவில் நீங்கா ஒரு அனுபவமாக இடம்பிடிக்கவிருக்கிறது. இவை எல்லாம் ஒரே நாளில் நடக்கப்போவதில்லை.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் நிலவுக்கு மிக அருகே வெள்ளிக் கோளானது நிலைகொண்டிருக்கிறது. அதன் பிறகு, ஜனவரி 13 ஆம் தேதி பௌர்ணமி நாளிலிருந்து செவ்வாய் கோளானது நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், வெள்ளியும், சனிக் கோளும் இதுவரை இல்லாத வகையில் நெருக்கமாக வந்துகொண்டிருக்கின்றன. இவை ஜனவரி 18 ஆம் தேதி முதல் மிக அருகருகே நேர்க்கோட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று, ஜன. 18 முதல், மாலை வேளைகளில், இவ்விரண்டு கோள்களும் ஒரே நேரத்தில் மக்களுக்குக் காட்சியளிக்கத் தொடங்கும்.

எப்போது காணலாம்?

சூரியன் மறைந்து, முழுவதும் இருள் சூழ்ந்த பிறகு உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணி முதல் பார்க்கலாம். ஆனால், வெள்ளி, சனி மற்றும் நெப்ட்யூன் கோள்கள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதற்கு இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு ஆகலாம். அது அவரவர் இருக்கும் இடத்தைப் பொருத்தது. அதன் பிறகு மேலும் சில மணி நேரங்களில் செவ்வாய், வியாழன், யுரேனஸ் கோள்களும் இவற்றுடன் அணிவகுக்கும். சூரிய உதயத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு செவ்வாய் மறைந்துவிடும்.

கோள்களின் அணிவகுப்புக்கு ஏதேனும் முக்கியத்துவம் உண்டா?

பொதுவாகவே, ஒன்றிரண்டு கோள்கள் ஒன்றாக நெருங்கி வரும். அதனை வானில் அவ்வப்போது காணலாம். ஆனால், ஒன்றல்ல இரண்டல்ல ஏழு கோள்கள் ஒன்றாக அணிவகுத்து வருவதும், இரவு நேரத்தில் பார்க்க முடிவதும் வழக்கமான ஒன்றல்ல. அபூர்வம்தான்.

அதுவும், கோடு போட்டதுபோல, ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்களும் ஒன்றாக அணிவகுப்பதும் அதிசயமே அசந்துபோகும் நிகழ்வு.

சூரியனைக் கோள்கள் சுற்றி வரும் பாதையானது, வானத்தின் குறுக்கே இருப்பதாக ஒரு கற்பனைக் கோடு. இந்தப் பாதையை 'கிரகணம்' என்று அழைக்கிறார்கள். சூரியனைச் சுற்றிக் கொண்டிருந்த வாயு மற்றும் தூசுகள் சேர்ந்து தட்டையாக உருவானதுதான் நமது பூமி மற்றும் இதர சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள். அதனால்தான் அவை சூரியனை ஒரே பாதையில் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.

எப்போதெல்லாம், வானில், இந்த கோள்களில் ஒன்றிரண்டு தென்படுகிறதோ, அவை இந்த சுற்றுப்பாதையில் பயணிக்கும்போதுதான் வானில் தெரிகிறது. இந்தப் பாதையை வைத்துத்தான், வானில் தெரிவது நட்சத்திரமா, கோள்களா என்று கண்டறிகிறார்கள்.

சூரியன் - பூமி - செவ்வாய்

இந்த நிலையில், சூரியனைச் சுற்றிவரும் பாதையில் ஒரே இடத்தில் கோள்கள் அணிவகுப்பது மட்டும் எவ்வாறு தனித்துவமான நிகழ்வாக மாறியிருக்கிறது. அதாவது, நாம் செவ்வாய்க் கோளை பார்க்கப் போகிறோம் என்றால், நமக்குப் பின்னால் சூரியன் இருக்கிறது என்று அர்த்தமாம்!

ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தோன்றும் அதிசயம்

செவ்வாய், வியாழன், வெள்ளிக் கோள், சனிக் கோள்களுடன் யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் கோள்களும் ஏழு மணி முதல் வானில் அணிவகுத்து நிற்பதைக் காண முடியும்.

இந்த நேரத்தில், கிழக்குப் பக்கத்தில் செவ்வாய் கிரகமும், தென்கிழக்கு திசையில் வியாழன் கோளும் வெள்ளிக் கோளும் சனிக் கோளும் அருகருகே தென்மேற்கு திசையில் தெரியும் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் வழக்கம் போல, வெள்ளிக் கோள் நட்சத்திரங்களை விடவும் கூடுதல் வெளிச்சத்துடன் வெண்மையான நிறத்தில் மின்னும் என்பதால், அனைத்துக் கோள்களையும் விட வெள்ளிக் கோள் நிச்சயம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்துவிடும்.

செவ்வாய்க்கிரகம், மிக உயரத்தில், அதிக வெளிச்சத்துடன் இருக்கும் கோள். இது ஜனவரி 16ஆம் தேதி, இந்த அணிவகுப்பில் இணைந்துள்ளது. இந்த அணிவகுப்பில் இருக்கும் யுரேனஸ் மற்றும் நெப்ட்யூனைப் பார்க்க வேண்டும் என்றால் வானம் இருண்டு தொலைநோக்கி உதவியோடு பார்க்கலாம் என்கின்றன தகவல்கள்.

இந்த அரிய நிகழ்வு ஜனவரி இறுதி வரை நீடிக்கும் என்றாலும் வெள்ளி மற்றும் சனிக் கோள்கள் நாள்தோறும் மாலையில் இளம் ஜோடிகளைப் போல ஒன்றாக மின்னிக்கொண்டிருக்குமாம்.

இந்த நட்சத்திரங்களின் அணிவகுப்பு பிப்ரவரி முதல் வாரம் வரை நீடிக்கும் என்றும், அன்றைய நாள்களில், இந்தக் கோள்களின் ஆதிக்கம் அதிகமாகவும் மிக மெல்லிய நிலவுடன் காட்சியளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் கண்களால் இவற்றைக் காண வேண்டும் என்றால், வானம் தெளிவாக, இருட்டாக இருக்க வேண்டும், தொலைநோக்கி இல்லாவிட்டாலும் பைனாகுலர் இருந்தால் நெப்ட்யூனைக் காணலாம்.

மார்ச் மாத நடுவில், பகல் நேரத்தின் நீளம் நீண்டுவிடும் என்பதால், அதன்பிறகு இந்த கோள்களைக் காண்பது அரிதாகிவிடும். எனவே, பிப்ரவரி மாத துவக்க மற்றும் மத்திய வாரங்கள் இதனைக் காண ஏற்றதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அமலுக்கு வருகிறது காஸா போா் நிறுத்தம்

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) முதல் அமலுக்கு வருவதாக கத்தாா் வெளியுறவுத் துறை அமைச்சா் மஜித் அல்-அன்சாரி தெரிவித்து... மேலும் பார்க்க

போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி விடுவிக்கப்பட இருக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு... மேலும் பார்க்க

ஈரான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் இருவர் சுட்டுக்கொலை!

ஈரான் உச்சநீதிமன்ற வளாகத்தில் இரு நீதிபதிகள் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டனர். ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் இன்று நுழைந்த மர்ம... மேலும் பார்க்க

போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஹிஸ்புல்லா!

லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நூற்றுக்கணக்கான முறை மீறி வருவதாகவும், தங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்பு... மேலும் பார்க்க

ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் விவேக் ராமசுவாமி!

இந்திய அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசுவாமி ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அமெரிக்கத் தொழிலதிபர் விவேக் ராமசுவாமி (39) கடந்தாண்ட... மேலும் பார்க்க

அமெரிக்காவை இருட்டில் தள்ளும் டிக் டாக்?

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை முதல் டிக் டாக் செயலி தடை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலியில் பதிவிடப்படும் தகவல்கள் குறித்து சீனாவுக்கு பகிரப்படுவதாகக் கூறி, பாதுகாப்பு ... மேலும் பார்க்க