எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 7% சரிவு!
புதுதில்லி: சூரிய சக்தி தகடுகள் இறக்குமதி மீதான வரி ஏய்ப்பு தொடர்பாக அமெரிக்க நிறுவனம் மீது விசாரணை நடத்தி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, உள்ளூர் வர்த்தகத்தில் வாரீ எனர்ஜிஸின் பங்குகள் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் சரிந்தன.
பிஎஸ்இ-யில் நிறுவனத்தின் பங்கு 6.93 சதவிகிதம் சரிந்து ரூ.3,207.30 ஆகவும், பகல் நேர வர்த்தகத்தில் அது 7.65% சரிந்து ரூ.3,182.40 ஆக முடிவடைந்தது.
என்எஸ்இ-யில் நிறுவனத்தின் பங்கு 6.89 சதவிகிதம் சரிந்து ரூ.3,207.60 ஆக முடிவடைந்தன.
சூரிய சக்தி இறக்குமதி மீதான வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் நிறுவனத்திற்கு எதிரான புகாரை அடுத்து அமெரிக்க அரசுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதாக வாரீ எனர்ஜிஸ் தெரிவித்துள்ளது.
இறக்குமதி மீதான வரி ஏய்ப்புக்காக, அமெரிக்கா நிறுவனம் மீது விசாரணை நடத்தி வருவதாக ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் துணை நிறுவனமான வாரீ சோலார், அமெரிக்க - டெக்சாஸில் செயல்படும் 1.6 ஜிகாவாட் உற்பத்தியை கொண்டுள்ளது. இது 3.2 ஜிகாவாட்டாக விரிவுபடுத்தப்படும் என்றது.
இதையும் படிக்க: வோடபோன் ஐடியா பங்குகள் 8% சரிவுடன் நிறைவு!