செய்திகள் :

வார்த்தையல்ல.. உணர்ச்சி: உ.பி.யில் பிறந்த 17 குழந்தைகளுக்கு 'சிந்தூர்' எனப் பெயரிட்ட பெற்றோர்!

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவிவந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவரது குடும்பத்தினர் "சிந்தூர்" எனப் பெயரிட்டுள்ளனர்.

கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கப் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" எனப் பெயரிடப்பட்டது. ஆபரேஷன் சிந்துவால் ஈர்க்கப்பட்ட பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கும் சிந்தூர் என்று பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அந்தவகையில், உ.பி.யில் மே 10, 11 ஆகிய தேதிகளில் குஷிநகர் மருத்துவக் கல்லூரியில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவரது குடும்பத்தினர் "சிந்தூர்" எனப் பெயரிட்டுள்ளனர் என்று மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.கே. ஷாஹி தனியார் செய்தி நிறுவனமான பிடிஐயிடம் தெரிவித்தார்.

ஏப்ரல் 22 அன்று தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரமான பஹல்காமுக்கு அருகிலுள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்திய ராணுவம் மே 7ம் தேதியன்று ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது. பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு எதிரான அனைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்டன.

பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுத்தற்காக இந்திய ஆயுதப்படைகளைப் பாராட்டிய குஷிநகரைச் சேர்ந்த அர்ச்சனா ஷாஹி தனது மகளுக்கு ராணுவ நடவடிக்கையின் பெயரான சிந்தூர் என வைத்துள்ளதாக பெருமிதம் அடைந்தார்.

​​பஹல்காம் தாக்குதலில் பலர் தங்கள் கணவரை இழந்துள்ளனர். அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். சிந்தூர் என்பது வெறும் வார்த்தையல்ல.. உணர்ச்சி. எனவே எங்கள் மகளுக்கு சிந்தூர் என்று பெயரிட முடிவு செய்துள்ளோம். எங்கள் மகள் பிறப்பதற்கு முன்னதாக அந்த பெயரை வைக்க முடிவு செய்ததாகவும், இந்த வார்த்தை எங்களுக்கு ஒரு உத்வேகம் என்று அர்ச்சனாவின் கணவர் கூறினார்.

அதேபோன்று பத்ரௌனாவைச் சேர்ந்த காஜல் குப்தாவும், தன் மகளுக்கு சிந்தூர் எனப் பெயரிட்டுள்ளார். இந்த ராணுவ நடவடிக்கையை நாங்கள் நினைவில் கொள்வது மட்டுமல்லாமல், இந்த நாளையும் கொண்டாடுவோம். "சிந்தூர்" எனப் பெயரிடுவது பெற்றோர்கள் கெளரமாகக் கருதுகின்றனர். அதேசமயம் அந்த பெயருக்குத் தைரியமானவள், எதிரிகளை அழிப்பவள் என்று அர்த்தமாகும்.

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா! என்ன நடக்கிறது?

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தாலும், அத்துடன் வர்த்தகத்தை முதன்மையாக வைத்தே இந்தப் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது என... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்! - மோடி

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையே ’ஆபரேஷன் சிந்தூர்’ என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்தார். “... மேலும் பார்க்க

ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது: சிந்து நதி நீர் குறித்து மோடி!

ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது என்று சிந்து நதி நீர் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்தார்.ஜம்... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கும், ஆயுத விஞ்ஞானிகளுக்கும் தலைவணங்குகிறேன்! - பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக மக்களிடையே உரையாற்றினார்.மக்களிடையே பிரதமர் மோடி பேசுகையில், “இந்திய ராணுவத்துக்கும், ஆயுதப் படை விஞ்ஞானிகளுக்கும் தலை வணங்குக... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமரின் முதல் உரை!

புது தில்லி; ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் முதல்முறையாக உரையாற்றி வருகிறார்.கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்... மேலும் பார்க்க

இந்தியா - பாக். ராணுவ தலைமை அதிகாரிகள் பேச்சு முடிவடைந்தது!

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் முதல்கட்டமாக இன்று(மே 12) பகல் பேச்சுவார்த்த... மேலும் பார்க்க