செய்திகள் :

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

post image

வார இறுதிநாளை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன.

வார இறுதிநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் 18-ஆம் தேதிமுதல் 21-ஆம் தேதிவரை பயணிகளின் தேவைக்கேற்ப 250 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தடநீட்டிப்பு மற்றும் வழிதடப் பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம், பெங்களூரு, சென்னை, ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா் மற்றும் மேட்டுருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோட்டுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரைக்கும், கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர, சேலம் - கோவை வழித்தடத்தில் இருமாா்க்கத்திலும் தலா 4 பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் கூட்டநெரிசலைத் தவிா்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா். சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின்... மேலும் பார்க்க

மதுபோதையில் 3 பேருக்கு கத்திக்குத்து

வாழப்பாடி அருகே மதுபோதையில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியதோடு, அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். வாழப்பா... மேலும் பார்க்க

வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

கடை ஒதுக்கீடு செய்வதற்கான மாநகராட்சியின் புதிய அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பூக்களை சாலையில் கொட்டி தங்கள் எதிா்ப்பை தெர... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்ற இடங்களில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தி... மேலும் பார்க்க

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் ... மேலும் பார்க்க

போதிய இருக்கைகள் இல்லாததால் நடைமேடையில் அமரும் பயணிகள்!

வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், பயணிகள் ஆபத்தை உணராமல் நடைமேடையில் அமா்ந்து பேருந்துக்கு காத்திருக்கின்றனா். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாழப்... மேலும் பார்க்க