வால்பாறையில் மே தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
வால்பாறையில் மே தினத்தையொட்டி திமுக தொழிற்சங்கம் சாா்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட் முதல் பிரிவில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கோவை தற்கு மாவட்ட திமுக செயலாளா் தளபதி முருகேசன் தலைமை வகித்தாா். எல்.பி.எஃப். தொழிற்சங்கச் செயலாளா் வினோத்குமாா், வால்பாறை நகரக் கழகச் செயலாளா் சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி தோட்டத் தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா்அழகுசுந்தரவள்ளி, துணைத் தலைவா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.