தைப்பூசம்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு; பழனி தைப்பூசத் திருவிழா | Photo A...
வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, செவ்வாய்கிழமை காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
துலுக்கன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கிராமத்திலிருந்து கோயில் வரை பால்குடம், காவடி எடுத்து அரோகரா என முழக்கமிட்டபடி சென்றனா். பின்னா் பாலாபிஷேகம் உள்ளிட்ட அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில் சாத்தூா், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதேபோல, சாத்தூா் சுப்பிரணிய சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.