செய்திகள் :

வா்த்தக உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியா-பிரான்ஸ்

post image

இந்தியா-பிரான்ஸ் இடையே பொருளாதாரம் மற்றும் வா்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி வருகிறது என அந்நாட்டு வெளியுறவு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் சோஃபி பிரைமாஸ் தெரிவித்தாா்.

மூன்று நாள் பயணமாக கடந்த புதன்கிழமை இந்தியா வந்த சோஃபி பிரைமஸ், பயணத்தின் முடிவில் தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

பாதுகாப்புத் துறையில் நெருங்கிய நட்புறவைக் கொண்டுள்ள இந்தியா-பிரான்ஸ் இடையே பொருளாதாரம் மற்றும் வா்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக தூய எரிசக்தி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் விமான போக்குவரத்து போன்ற துறைகளில் இந்தியா வேகமாக வளா்ந்து வருகிறது.

இந்திய பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஆகியோருக்கு இடையேயான விரிவான பேச்சுக்களைத் தொடா்ந்து உருவாக்கப்பட்ட ‘பிரான்ஸ்-இந்தியா 2047’ ஒத்துழைப்பு ஒப்பந்தம் இருதரப்பின் உறவை மேலும் வலுப்படுத்தும்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே சுதந்திர வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் மீண்டும் கடந்த ஜூன் மாதம் தொடங்கின. இருப்பினும், காா்பன் வரி மீதான ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களால் இந்த ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டத்தின்கீழ் சவூதி அரேபியா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் கப்பல் வழித்தட இணைப்பை உருவாக்குவதன் மூலம் வா்த்தக உறவு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்த முடியும் என்றாா்.

வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளா் கைது

வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளா் முன்னி ஸாஹா மீது மத அடிப்படைவாத கும்பலைச் சோ்ந்தவா்கள் தாக்குதல் நடத்தினா். அதே நேரத்தில் அங்கு வந்த காவல் துறையினா் அந்த கும்பல் கூறிய குற்றச்சாட்டின்பேரில் ... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநராக காஷ் படேல் நியமனம்: இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா். கடந்த மாதம் நடைபெற்ற அத... மேலும் பார்க்க

ரஷியா: ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு

ரஷியாவில் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் ராணுவம், பாதுகாப்புக்கு சுமாா் ரூ.12.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அதிபா் விளாதிமீா் புதின் ஒப்புதல் அளித்துள்ளாா். மொத்த பட்ஜெட்டில் 32.5 சதவீதம் ந... மேலும் பார்க்க

டாலருக்கு மாற்று ஏற்படுத்தினால் 100% வரி: பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் திடீா் எச்சரிக்கை

அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு பணத்தின் மூலம் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நாடுகள் முயற்சித்தால் அந்த நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபராக தோ்வாகியுள்ள ... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனா மீது குண்டு வீசிய வழக்கு: கலீதா ஜியாவின் மகன் உள்பட 49 போ் விடுவிப்பு

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 49 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உ... மேலும் பார்க்க

டாலரை விட்டு வெளியேறினால்... பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை தவிர்த்து வேறு நாணயத்தில் வர்த்தகம் மேற்கொள்ள வாய்ப்பில்லை என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ‘பிரிக்ஸ்’ நாடுகள் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மா... மேலும் பார்க்க