செய்திகள் :

விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆப்கானிஸ்தான்!

post image

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று (ஜனவரி 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

157 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ரஹ்மத் ஷா 19 ரன்களும், அப்துல் மாலிக் மற்றும் ஃபரீத் அகமது தலா 17 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க: ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் சாம்பியன்ஸ் டிராபியுடன் முடிவுக்கு வருகிறதா?

ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா மற்றும் நியூமேன் நியாம்ஹுரி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முஸராபானி 2 விக்கெட்டுகளையும், நிகராவா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

86 ரன்கள் முன்னிலை

ஆப்கானிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஜிம்பாப்வே அணி இரண்டாம் நாளில் அதன் முதல் இன்னிங்ஸில் 243 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் கிரைக் எர்வின் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சிக்கந்தர் ராஸா 61 ரன்களும், சீன் வில்லியம்ஸ் 49 ரன்களும் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஹ்மத்ஸாய் 3 விக்கெட்டுகளையும், ஃபரீத் அகமது 2 விக்கெட்டுகளையும் மற்றும் ஸியா உர் ரஹ்மான் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தான் அணியைக் காட்டிலும் 86 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையும் படிக்க: ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம்: ஆஸி. முன்னாள் கேப்டன்

தடுமாற்றம்

86 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 40 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்; அரசியல்வாதிகள் வலியுறுத்தல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேத... மேலும் பார்க்க

இளைஞர்களின் கனவு நனவானது: டி10 டென்னிஸ் லீக் குறித்து யுவராஜ் சிங்!

டி10 டென்னிஸ் லீக் குறித்து முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.டிபிசிபிஎல் (டென்னிஸ் பந்து கிரிக்கெட் பிரிமீயர் லீக்) இந்தப் போட்டிகளை இந்தியாவின் 50 நகரங்களில் நடத்த திட்டம... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்!

தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு எதிர்காலத்தில் பிசிசிஐ அனுமதிக்கும் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.இந்திய வீரரான தினேஷ் கார்த்தி... மேலும் பார்க்க

டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர் அறிமுகம்!

டென்னிஸ் பந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்குபெறும் டி10 டென்னிஸ் கிரிக்கெட் தொடரின் அறிமுக விழா நடைபெற்றது.இந்தப் போட்டிகள் மே 26ஆம் தேதி முதல் ஜுன்... மேலும் பார்க்க

இலங்கை டெஸ்ட் தொடரையும் தவறவிடும் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை பிரபல ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தவறவிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜோஷ் ஹ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பிரீமியர் லீக்: ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் விலகல்!

பாகிஸ்தான் பிரீமியர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் இருந்து ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் உள்பட நட்சத்திர வீரர்கள் 7 பேர் விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும், இந்தியாவுக்கு எதிரான தொடர்கள் இருப்பதால், இங்கிலாந்த... மேலும் பார்க்க