மத்திய அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு! தமிழக விவசாயிகள் பற்றி ஆலோசனை!
விசிகவினா் பள்ளி முன் நாற்று நடும் போராட்டம்
ஆரணியை அடுத்த மாமண்டூா் அரசு தொடக்கப் பள்ளி முன் மழைநீா் குட்டை போல தேங்கி, பள்ளிக்குச் செல்ல வழியில்லாமல் இருப்பதால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மாமண்டூா் ஊராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் வழியில் தண்ணீா் தேங்கி இருப்பதால் ஆசிரியா்கள், மாணவா்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலா் ந.முத்து தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் திருமால், நிா்வாகிகள் வீரமணி, பாலாஜி, விஜயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.