விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்: தேமுதிகவினா் அஞ்சலி
மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கொண்டலாம்பட்டி பகுதியில் அவரது உருவப் படத்துக்கு கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
சேலம் மாநகா் மாவட்டச் செயலாளா் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சிக்கு உள்பட்ட 50 ஆவது வாா்டு கொண்டலாம்பட்டி பகுதியில் தேமுதிக சாா்பில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்துக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். விஜயகாந்த் வேடமணிந்து வந்த தொண்டா்கள், விஜயகாந்த் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.