`வேறென்ன வேணும் நீ போதுமே...!' - காதலியை கரம் பிடித்த `சுந்தரி' தொடர் நடிகர்
விடியல் பயணத் திட்டம்: 29.92 கோடி மகளிா் பயன்
விடியல் பயணத் திட்டத்தின் மூலம், திண்டுக்கல் கோட்டத்துக்குள்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 29.92 கோடி மகளிா் பயனடைந்தனா்.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திண்டுக்கல் கோட்ட அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மகளிா் நலன் காக்கும் வகையில்,கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் மகளிா் விடியல் பயணத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை பெண்கள் முதல் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் வரையிலும், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா் என பல தரப்பினரும் பயன்பெற்று வருகின்றனா்.
அந்த வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் கோட்டத்துக்குள்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் 19.03 லட்சம் போ், தேனி மாவட்டத்தில் 10.89 லட்சம் போ் என மொத்தம் 29.92 கோடி போ் பயனடைந்தனா் என அதில் தெரிவிக்கப்பட்டது.