செய்திகள் :

விண்ணப்பித்துவிட்டீர்களா? திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் பணிகள்!

post image

வேலூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Guest Lecturers

சம்பளம்: மாதம் ரூ. 25,000

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்று UGC-NET அல்லது CSIR-NET தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறைகள் விவரம்:

1. Tamil

2. English

3. Economics

4. Mathematics

5. Physics

6. Chemistry

7. Biochemistry

8. Biotechnology

9. Zoology

10. Microbiology

11. Computer Science12) Commerce

13. Environmental Science

14. Management Studies

15. Library and Information Science

தேர்வு செய்யப்படும் முறை: நெட், முனைவர் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு குறித்த விபரம் சம்மந்தப்பட்டவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tvu.edu.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட் டுள்ளது. அதைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றுகளின் நகல்களுடன் 2.4.2025 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்ப நகல் மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்து தபால் மூலமாக 7.4.2025 அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி

The Registrar, Thiruvalluvar University, Vellore-632 115.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மிஸ்பண்ணிடாதீங்க... ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசுப் பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, இந்திய ரயில்வே 16 மண்டலங்களில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளிய... மேலும் பார்க்க

ராணுவத்தில் சேர ஏப்.10 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் இணையதளம் மூலம் வருகிற ஏப். 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.நாட்டில் உள்ள இளைஞர்களை இந்திய ராணுவத்தில் ஈடுபடுத்தும் வக... மேலும் பார்க்க

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாவட்ட சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணிகள்

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார மையங்களில் நவவாழ்வு சங்கத்தின்கீழ் உள்ள கீழ்வரும் காலிப் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிட... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள பயிற்சி ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 4 ஆம் தேதிக்குள் வி... மேலும் பார்க்க

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!

பொதுத்துறை மின்உற்பத்தி நிறுவனமான தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித்தொகை திட... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். ... மேலும் பார்க்க