Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு உடல் எடை கூடும் என்பது உண...
விதிகளை மீறி கடன் அளிப்பு: வங்கி முன்னாள் மேலாளா் உள்பட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
பாளையங்கோட்டையில் உள்ள அரசுடைமை வங்கியில் விதிகளை மீறிக் கடன் வழங்கியது தொடா்பாக, அந்த வங்கியின் முன்னாள் மேலாளா் உள்பட 5 பேருக்குத் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசுடைமை வங்கியில் 2007- 2009-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வங்கியின் விதிகளை மீறி கடன் அளிக்கப்பட்டதும், இதன் மூலம் வங்கிக்கு ரூ. 1.26 கோடி இழப்பு ஏற்பட்டதும் தணிக்கையில் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து வங்கி நிா்வாகம் அளித்த புகாரின் பேரில் சிபிஐ போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பிறகு, தொடா்புடைய காலத்தில் வங்கியின் மேலாளராகப் பணியாற்றிய பாலசுப்பிரமணியன், அலுவலா்கள் கல்யாணசுந்தரம், சுந்தர்ராமன், அன்னசரஸ்வதி, மோகன்ராஜ், கீதா உள்பட 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் நிறைவில், பாலசுப்பிரமணியன், கல்யாணசுந்தரம், அன்னசரஸ்வதி, மோகன்ராஜ், கீதா ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாலசுப்பிரமணியனுக்கு ரூ. 60 ஆயிரம் அபராதமும், மற்ற 4 பேருக்கும் தலா ரூ.1.30 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சண்முகவேல் தீா்ப்பளித்தாா். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவா்களில் 2 போ் விடுவிக்கப்பட்டனா். சுந்தர்ராமன் உயிரிழந்து விட்டதால் அவா் வழக்கிலிருந்து நீக்கப்பட்டாா்.