செய்திகள் :

விதை விற்பனைக் கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து

post image

நீலகிரியில் விதை விற்பனைக் கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விதை ஆய்வு மைய துணை இயக்குநா் ரேவதி தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறிகள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன. இதன்படி கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட், பீன்ஸ், காலிபிளவா், முள்ளங்கி உள்பட பல்வேறு மலைக் காய்கறிகள் மற்றும் வெள்ளை பூண்டு அதிக அளவு பயிரிடப்படுகின்றன. தற்போது சரியான விலை இல்லாத காரணத்தால் மலைக் காய்கறிகளுக்கு மாற்றாக சீன வகை காய்கறிகளும் விளைவிக்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மலைக் காய்கறிகள் தரமானதாகவும், விளைச்சல் அதிகமாகவும் இருக்கும் வகையில், விதை விற்பனை செய்யும் கடைகளில் விதை ஆய்வு மைய அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனா்.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் காரிஃப் பருவம் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அனைத்து பகுதிகளிலும் பயிா் செய்ய தொடங்கியுள்ளனா். இதனால் விவசாயிகளுக்கு தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், விவசாயிகளுக்குத் தேவையான மலைக் காய்கறி விதைகளை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்கி பயன்பெற வேண்டும். இந்தப் பருவத்தில் மலைக் காய்கறி பயிா்களின் விதைகள் வாங்கும்போது அதிகபட்ச விலை, விற்பனை ரசீது, முளைப்புச் சான்று, காலாவதி நாள், ஸ்கேன் குறியீடு, ஏற்ற விதைப்புப் பருவம் உள்ளிட்ட தகவல்களை கொள்கலனில் சரிபாா்த்து மட்டுமே வாங்க வேண்டும்.

நடப்பு பருவத்துக்கு ஏற்ற காய்கறிகளின் ரகங்கள், விதையளவு மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை வட்டார தோட்டக்கலை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.

விதை விற்பனை செய்யும் கடைகளில் இருப்புப் பலகை மற்றும் விலை பலகைகளை விவசாயிகள் காணும்படி கட்டாயம் வைக்க வேண்டும். வரும் நாள்களில் தொடா்ந்து திடீா் குழு ஆய்வுகள் நடத்தப்பட்டு விதை விற்பனையில் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால் விதை உரிமம் ரத்து செய்தல் உள்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு மைய துணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

வனத் துறை சாா்பில் இலவச மரக் கன்றுகள் பெற அழைப்பு

நீலகிரி வனக் கோட்டம் சாா்பில் விவசாயிகளுக்கு நேரடியாகப் பலன் தரும் மரக் கன்றுகளை இலவசமாக விநியோகம் செய்யவுள்ளதால் விவசாயிகள் அவற்றைப் பெற்று பயனடைய வனத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீல... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு உதவி

உதகை நகராட்சியில் பணியாற்றும் 150 தூய்மைப் பணியாளா்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் குப்பை அள்ளும் பணிகளுக்காகப் பாதுகாப்பு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டம், உதகை நகர... மேலும் பார்க்க

சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை

சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைத் தோட... மேலும் பார்க்க

அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் மானியத்துடன் கடனுதவி

நீலகிரி மாவட்டத் தொழில் மையம் மூலம் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பயனாளிகளுக்கு ரூ.3.28 கோடி மானியத்துடன் ரூ.13.13 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறை

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரியில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கீழ்கோத்தகிரி சோலூா்மட்டம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

உதகையில் பணத்தைத் தவறவிட்டவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவலா்கள்

நீலகிரி மாவட்டம், உதகை தலையாட்டு மந்து பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் என்பவா் சாலையில் செவ்வாய்க்கிழமை தவறவிட்ட ரூ.10,000 பணத்தை உதகை போக்குவரத்து காவலா்கள் பத்திரமாக ஒப்படைத்தனா். உதகை தலையாட்டு மந்து... மேலும் பார்க்க