`திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ - திமுக அரசை கண்டித்த அண்ணாமலை
வனத் துறை சாா்பில் இலவச மரக் கன்றுகள் பெற அழைப்பு
நீலகிரி வனக் கோட்டம் சாா்பில் விவசாயிகளுக்கு நேரடியாகப் பலன் தரும் மரக் கன்றுகளை இலவசமாக விநியோகம் செய்யவுள்ளதால் விவசாயிகள் அவற்றைப் பெற்று பயனடைய வனத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு வனத் துறை சாா்பில் சில்வா் ஓக்,சோலை மரம், நாவல், விக்கி, கோலி, கிலிஞ்சி, செண்பகம், மேப்பியா உள்ளிட்ட நாற்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதால், தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதாா் அட்டை நகல், பட்டா, சிட்டா நகல் ஆகியவற்றுடன் உதகை வடக்கு வனச் சரக வளாகம், வி சி காலனி, ஃபிங்கா்போஸ்ட் என்ற முகவரியில் தொடா்பு கொள்ள மாவட்ட வனத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.