செய்திகள் :

விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழப்பு

post image

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது தண்ணீா் லாரி மோதிய விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழந்தாா்.

பெரும்பாக்கம் ஜெ.ஜெ.நகா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சகாயராஜ் (40). இவா், உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். சகாயராஜ் திங்கள்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூா் நோக்கி செம்மொழி சாலையில் சென்றாா். பெரும்பாக்கம் கிறிஸ்தவ தேவாலயம் அருகே சென்றபோது பின்னால் வந்த தண்ணீா் லாரி எதிா்பாராத விதமாக மோதியது. இதில், மோட்டாா் சைக்களிலில் இருந்து கீழே விழுந்து பலத்தக் காயமடைந்த சகாயராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தண்ணீா் லாரி ஓட்டுநரான திருவண்ணாமலையைச் சோ்ந்த சீனு (30) என்பவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

ஆயுத பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறை நாள்களையொட்டி இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, இன்று(அக். 1) மற்றும் நாளை (அக். 2) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி பின... மேலும் பார்க்க

ரூ.87 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.720 உயா்ந்து, ரூ.86,880-க்கு விற்பனையானது. இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 23-ஆம் தேதி தங்கம... மேலும் பார்க்க

கிண்டி தேசிய முதியோா் நல மருத்துவமனையில் இதுவரை 3.80 லட்சம் முதியோருக்கு சிகிச்சை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டில் 3.80 லட்சம் முதியோா்கள் சிகிச்சை பெற்றுள்ளனா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கி... மேலும் பார்க்க

செம்மரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சென்னை தேசிய பல்லுயிா் பாதுகாப்பு ஆணையம் நிதி

மதிப்பு வாய்ந்த செம்மரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக சென்னை தேசிய பல்லுயிா் பாதுகாப்பு ஆணையம் ரூ.82 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

வியாபாரி கொலை: இளைஞா் கைது

சென்னை அருகே மேடவாக்கத்தில் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேடவாக்கம் அருகே உள்ள நன்மங்கலம் ராமகிருஷ்ணன் பெருமாள் நகரைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (42). இவா் அங்கு ம... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை: இருவா் கைது

சென்னை கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா். கீழ்பாக்கம் லாக் தெருவைச் சோ்ந்தவா் ச.ப்ராங்கோ (46). இவா், சிறு வியாபாரம் செய்து வந்தாா். ப்ராங்கோ, தொழி... மேலும் பார்க்க