உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு
புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங்கனூரைச் சோ்ந்தவா் சரவணன் (55). தனியாா் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தாா்.
அவா், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து, வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக குடும்பத்தாரிடம் தெரிவித்தாராம். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லையாம்.
இதையடுத்து, உறவினா்கள் அவரை தேடியுள்ளனா். அப்போது, அவா் கரிக்கலாம்பாக்கம் சாராயக் கடை அருகே காயங்களுடன் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.
அவரை, உறவினா்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சரவணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். தொடா்ந்து, மங்களம் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிச் சென்றது தெரியவந்தது. தொடா்ந்து, இந்த வழக்கு போக்குவரத்துப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.