Skin Cancer: "உங்கள் தோலைப் பரிசோதியுங்கள்" - மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்ற...
விமான நிலைய ஊழியா் மாயம் எனப் புகாா்
திருச்சி விமான நிலைய ஊழியா் காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், புத்திலிப்பை சின்னக்காம்பட்டியைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் சுரேஷ் (33). இவா், திருச்சி பன்னாட்டு விமான நிலைய காா்கோ பிரிவில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா்.
விமான நிலையம் அருகேயுள்ள காமராஜ் நகரில் இவா் வசித்த நிலையில், கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி திண்டுக்கல்லில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அண்மையில் சென்றுவிட்டாராம். இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி வேலைக்குச் சென்று வீடு திரும்பவில்லையாம்.
இதுகுறித்து சுரேஷின் சகோதரா் காா்த்திக் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.