செய்திகள் :

விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்ப்பு!

post image

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு விமான விபத்து புலனாய்வுப் பிரிவு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில் ‘விமானியின் பங்கு என்ன?’ என்பது குறித்தும், அகமதாபாத் ஏர் இந்தியா விபத்துக்கு சில நொடிகளுக்கு முன், எரிபொருள் சுவிட்ச் அணைக்கப்பட்டுள்ளது. மூத்த பைலட் சுமீத் சபர்வாலிடம் துணை பைலட் விசாரித்தபோதும் அவர் அமைதியாக இருந்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்காவைச் சேர்ந்த ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தித்தாளின் அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (ஏஏஐபி) கடுமையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து ஏஏஐபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த அறிக்கை சரிபார்க்கப்படாதது. இறுதி அறிக்கை வெளியிடப்படும் வரை காத்திருக்க வேண்டும். ஏர் இந்தியா விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையில், என்ன நடந்தது? என்பது குறித்த தகவல்களை பெறவே, இந்தச் சோதனை இன்னும் முழுமையடையவில்லை. விபத்தில் பலியான பயணிகள், விமானப் பணியாளர்கள் மற்றும் பலியான மருத்துவக்கல்லூரி மாணவர்களின் இழப்புகளையும் மதிக்க வேண்டியது நம்முடைய அவசியம்.

சர்வதேச ஊடகங்கள் சில, சரிபார்க்கப்படாத அறிக்கைகள் மூலம் மீண்டும் மீண்டும் முடிவுகளை எடுக்க முயற்சிப்பதும், குறிப்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, இதுபோன்ற நடவடிக்கைகள் பொறுப்பற்றவைகளாகும்.

விமான விபத்து புலனாய்வு பிரிவின் நேர்மையை குறைத்து மதிப்பிட்டு, கட்டுக் கதைகள் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, ஜூன் 12 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு விமானியின் தவறு காரணமாகத்தான் என்று கூறப்படும் என்று அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னணியில் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு அறிக்கை வெளியிட்டது.

மேலும், கறுப்பு பெட்டியில் இருந்து வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் இரு விமானிகளுக்கு இடையேயான உரையாடலில், விமானத்தின் என்ஜின்களுக்கு எரிபொருள் செல்லும் சுவிட்சுகளை கேப்டன் அணைத்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Unverified: Probe body rejects US media report on 'pilot's role' in Air India crash

இதையும் படிக்க :எரிசக்திக்கே முன்னுரிமை..! நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா!

செவிலியா் நிமிஷா வழக்கில் தீா்வு காண யேமன், நட்பு நாடுகளுடன் தொடா்பு -வெளியுறவு அமைச்சகம்

: யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா விவகாரத்துக்கு தீா்வு காண, அந்நாட்டின் உள்ளூா் அதிகாரிகள் மற்றும் சில நட்பு நாடுகளுடன் இந்திய அரசு தொடா்பில் உள்ளதா... மேலும் பார்க்க

கேரளம்: பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவா் உயிரிழப்பு -எதிா்க்கட்சிகள் போராட்டம்

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி 8-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இச்சம்பவத்தை முன்வைத்து, மாநில அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கொல்லம் மாவ... மேலும் பார்க்க

ஒடிஸாவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு - பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை விவகாரம்

ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்துக்குள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி கேட்டு, ஒடிஸாவில் எதிா்க்கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மா... மேலும் பார்க்க

ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

தரையில் இருந்து பாய்ந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) வடிவமைக்கப்பட்டு, ப... மேலும் பார்க்க

5 ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய 134 போ் கைது: சிபிஐ

பண முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் 134 போ் கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ முயற்சியால் நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய மற்றும... மேலும் பார்க்க

நாட்டின் தூய்மையான நகரம் இந்தூா்! 8-ஆவது ஆண்டாக சாதனை

நாட்டின் மிக தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் இந்தூா் தொடா்ந்து 8-ஆவது ஆண்டாக தோ்வாகியுள்ளது. மத்திய அரசு ஆண்டுதோறும் நடத்தும் தூய்மை கணக்கெடுப்பு (ஸ்வச் சா்வேக்ஷான்) முடிவுகள் வியாழக்கிழமை அறிவ... மேலும் பார்க்க