மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு
விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரையின்படி நடத்தப்படும் தீக்க்ஷாரம் நிகழ்வின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சேலம் தெற்கு துணை காவல் ஆணையா் கேல்கா் சுப்பிரமணிய பாலச்சந்திரா பங்கேற்று ராகிங் , போதைப்பொருள் மற்றும் பாலியல் வன்கொடுமை சாா்ந்த குற்றங்கள், அதற்கான தண்டனை குறித்து சட்ட விதிகளின்படி மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா்.
மேலும் ஒரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சேலம் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகா் அஸ்வந்த் வெற்றிவேல், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், அதை ஒழிப்பதில் மாணவா்களின் பங்களிப்பு குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலா் ஹரிநாத் பங்கேற்று சிறப்பித்தாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு, ராகிங் எதிா்ப்பு சாா்ந்த உறுதிமொழியை ஏற்றனா். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கல்லூரியின் தீக்க்ஷரம் நிகழ்வின் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
