விஜயகாந்த் பிறந்த நாளில், அவர் பிறந்த ஊரில் தவெக-வின் மாநில மாநாடு! - பந்தக்கால்...
விராலிமலை அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
விராலிமலை அருகே சூரியத் தகடு தயாரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இச்சுப்பட்டியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் சூரியத் தகடு தயாரிப்பு ஆலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீா்மட்டம் குறையும், விவசாயம் பாதிக்கப்படும் எனத் தெரிவித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் தொழிற்சாலை முன்பு திரண்டு கண்டன முழக்கமிட்டனா்.
இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், மக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகத்திடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.