செய்திகள் :

``விருந்து சாப்பிடும் மத்திய குழுவினர் மொய் வைப்பதில்லை..'' - குறைதீர் கூட்டத்தில் சாடிய விவசாயி!

post image

தஞ்சாவூர், கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், 100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்காததால், கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெஞ்சல் புயல் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு, பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து சொற்ப நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசும் விவசாயி ஜீவக்குமார்

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து, விவசாயிகள் வெளிநடப்பு செய்து, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

இதில் ஜீவக்குமார் பேசுகையில், "சில மாதங்களுக்கு முன்பு அறுவடை சமயத்தில் பெய்த மழையில் நெற்பயிர் பாதிக்கப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் ஈரபதத்தின் அளவை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மத்திய குழுவினர் வந்து பாதிப்பை பார்வையிட்டுச் சென்றனர். ஆனால் அதன் பின்னர் ஈரப்பதத்தின் அளைவை கூட மத்திய குழுவினர் அறிவிக்கவில்லை.

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

ஆய்வுக்கு வந்த மத்திய குழுவை சேர்ந்த அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், முந்திரி பக்கோடா, மைசூர் பாகு, ஜாங்கிரி, மிக்சர் தந்து உபசரிக்கிறோம். இதில் பெரும்பாலும் நெய்யில் செய்த பலகாரங்கள் இடம் பிடிக்கின்றன. குடிப்பதற்கு இளநீர், காபி என ராஜ உபசரிப்பு செய்து திருப்பி அனுப்புகிறோம். ஆய்வு செய்து விட்டு போன பிறகு அவர்களிடமிருந்து எந்த அறிவிப்பும் வருவதில்லை. மண்டபத்தில் விருந்து சாப்பிட்டு விட்டு மொய் வைக்காமல் செல்வது போல் உள்ளது மத்திய குழுவினரின் செயல். பல புயல்களில் பாதிப்பு ஏற்பட்ட போது இது தான் நடந்திருக்கிறது, இப்போதும் இதுவே நடந்திருக்கிறது" என்றார்.

இது நாம் செய்கிற விருந்தோம்பல் என அதிகாரிகள் ஜீவக்குமாரிடம் தெரிவித்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சர்ச்சை பேச்சால் ஆட்சியர் பணியிட மாற்றம்.. என்ன நடந்தது?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற மூன்றரை வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ... மேலும் பார்க்க

Seeman-க்கு ஷாக் தரும் சம்பவங்கள்! DMK-க்கு அதிர்ச்சி தரும் ஆடியோ?! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,சீமானுக்கு, காவல்துறை அனுப்பிய சம்மன், அதை கிழித்த சீமான் பாதுகாவலர் என பரபரக்கும் அரசியல். 'என்னை பார்த்து திமுகவுக்கு பயம்' என்கிறார் சீமான். உண்மையில் பயப்படுவது சீமான் தா... மேலும் பார்க்க

கரூர்: ``இந்த ஒரு ஏரி நிரம்பினால் 50 கிராமங்கள் சிறக்கும்..'' - தீர்வு சொல்லும் மாணவிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கணித அறிவியல் மன்றம் சென்னை மற்றும் அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு நியூ டெல்லி ஆகியவை இணைந்து நடத்திய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2024 - ம் ஆண்டிற்கான மாநில அளவிலான அறிவ... மேலும் பார்க்க

``ஹோட்டலில் இட்லி சாப்பிட்டால் புற்றுநோய் வரும் அபாயம்..'' - கர்நாடக அரசு எச்சரிக்க காரணம் என்ன?

ஹோட்டலில் தயாரிக்கப்படும் இட்லி சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக கர்நாடகா அரசு ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பெரும்பாலானோர் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவாக இட்லி உள்ளது.... மேலும் பார்க்க

அப்போ `ஜோ பைடன்', இப்போ `ட்ரம்ப்' - ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?!|Explained

2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போரின் வயது இந்த மாதத்தோடு மூன்று.இந்தப் போருக்கு பின் தொடங்கிய போர் எல்லாம் சமாதனத்தையும், போர் நிறுத்தத்தையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கு... மேலும் பார்க்க

``புதுச்சேரி போலீஸ் லஞ்சம் வாங்கறாங்க… நாங்க நேர்மையா இருக்கோம்'' - ஐஆர்பிஎன் அறிக்கையால் சர்ச்சை

புதுச்சேரியில் இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் (IRBn) படைப்பிரிவு கடந்த 2005-ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தலைமையகம் கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஐ.ஆர்.பி.என் படைப் பிரிவு ஆரம்பிக்கப... மேலும் பார்க்க