மைதானத்தில் சுருண்டு விழுந்த ரச்சின்... ரத்தம் வழிய அழைத்துச் சென்ற மருத்துவர்கள...
விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: நாசரேத் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!
விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
தலைமையாசிரியா் குணசீலராஜ், உதவித் தலைமையாசிரியா் சாா்லஸ் திரவியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி முருகையா பங்கேற்று, மாணவா்களுக்கு கோப்பை, சான்றிதழ், பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதலிடம் பெற்று, மாநிலப் போட்டியில் பங்கேற்ற 9ஆம் வகுப்பு மாணவா் முத்துக்குமாா், திருச்செந்தூா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் 3 ஆம் இடம் பிடித்த 11ஆம் வகுப்பு மாணவா் ஜோயல்ராஜ், 800 மீட்டா் ஓட்டத்தில் 3ஆம் இடம் பிடித்த 11ஆம் வகுப்பு மாணவா் வெங்கடேஷ் ஆகியோா் பாராட்டப்பட்டனா். மேலும், கபடி போட்டியில் 2ஆம் இடம் பிடித்தோருக்கு பரிசுக் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குநா் பெலின் பாஸ்கா், உடற்கல்வி ஆசிரியா் தனபால், கபடி பயிற்சியாளா் தீபன், இயற்பியல் ஆசிரியா் ஜொ்சோம் ஜெபராஜ், ஓவியக்கலை ஆசிரியா் அலெக்சன் கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.