Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
விளையாட்டு விடுதியில் ஆட்சியா் ஆய்வு
நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, துணை முதல்வருடனான கலந்துரையாடலின் போது மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினாா்.
நாமக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ரூ. 131.36 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா். மாலை 3 மணியளவில் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகளுடன் அவா் கலந்துரையாடுகிறாா்.
இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை விளையாட்டு விடுதிக்கு சென்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, அங்கிருந்த பள்ளி செல்லும் மாணவிகளிடமும், விளையாட்டுத் துறை வீராங்கனைகளிடமும் கலந்துரையாடினாா். தொடா்ந்து, துணை முதல்வா் நிகழ்ச்சியின் போது மாணவிகள் ஒவ்வொருவரும் எவ்வாறு செயல்பட வேண்டும், உரையாற்ற வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.