விளையாட்டு வீரர்களுக்குத் தில்லி அரசு உரிய வசதிகள் வழங்கும்: முதல்வர்!
தில்லி விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாஜக அரசு வழங்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
தல்கடோரா மைதானத்தில் தில்லி விளையாட்டு-2025ஐ முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது,
முந்தைய அரசின் கீழ் தில்லி விளையாட்டு வீரர்கள் தில்லியை விட்டு வெளியேறிப் பிற மாநிலங்களில் பதிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால், தற்போது தில்லி அரசு தில்லி விளையாட்டு கவுன்சில் மூலம் அவர்களுக்கான வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
தில்லியில் உள்ள இளைஞர்கள், மாணவர்களுக்கு தில்லி அரசு அனைத்து வசதிகளையும் வழங்கும், இதனால் அவர்கள் மீண்டும் தங்கி நகரத்திற்குப் பெருமை சேர்க்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
தில்லி விளையாட்டு பல்கலைக்கழகத்தைத் திறக்கும் திட்டத்தை முந்தைய அரசு தடுத்ததாகக் குற்றம் சாட்டிய அவர், தனது அரசு அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது என்றார்.