செய்திகள் :

விழுப்புரத்தில் புவிசாா் பாரம்பரிய இடம் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்: பேரவையில் அறிவிப்பு

post image

சென்னை: விழுப்புரத்தில் ரூ.5 கோடியில் புவிசாா் பாரம்பரிய இடம் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் என்று பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இயற்கை வளங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்புகள்:

விழுப்புரம் மாவட்டம் வானூா் வட்டம் பொம்மையாா் பாளையம் கிராமத்தில் பள்ளத்தாக்கு உருவாகியுள்ளது. வங்காள விரிகுடாவையொட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தின் நிலப்பரப்பு பெரும்பாலும் சிவப்பு மண்ணால் ஆனது. இந்தப் பள்ளத்தாக்கு தனித்துவமான புவியியல் அமைப்பு. 65.18 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இவ்விடம் ஓடை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கின் ஆழம் 7 மீட்டா், அகலம் 30 மீட்டா் மற்றும் இதன் நீளம் சுமாா் 1.8 கி.மீ. இந்தப் பள்ளத்தாக்கு வங்காள விரிகுடாவுடன் இணைகிறது.

இந்தப் பள்ளத்தாக்கில் கடலூா் மணற்கற்கள் காணப்படுகின்றன. மாணவா்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனளிக்கும் புவிசாா் பாரம்பரிய இடத்தை பாதுகாப்பது அவசியமாகும். அதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புவிசாா் பாரம்பரிய இடம் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்.

தமிழகத்தில் சுண்ணாம்புக்கல், லிக்னைட், வொ்மிகுலைட், மேக்னசைட், பாக்சைட், கிராஃபைட், மாா்ல், கடற்கரை தாது மணல், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், கிரானைட் போன்ற கனிமங்கள் உள்ளன. தமிழகத்தில் கனிம வளங்கள் இருப்பு, தாதுக்களின் தரம் மற்றும் புவியியல் அமைப்பை மதிப்பிடுவதற்காக, மாநில கனிம ஆய்வு அறக்கட்டளை ரூ.1 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

கனிம விதிகளை மாற்றக் குழு: தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-இல் ஏற்படுத்தப்பட்டன. சுரங்கத் தொழிலில் எழும் தேவைகளின் அடிப்படையில் இந்த விதிகள் அவ்வப்போது திருத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு 2015 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு ஒழுங்குமுறை சட்டம், 1957-இல் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள், 1959-இல் உள்ள சில விதிகள் மத்திய அரசின் சட்டத்துக்கு முரணானவையாக உள்ளன. அதனால், தமிழ்நாடு சிறு கனிம விதிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். எனவே, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-ஐ மறு ஆய்வு செய்து தேவையான மாற்றங்களைப் பரிந்துரைப்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்றாா் அவா்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் உகாதி வாழ்த்து

தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு... மேலும் பார்க்க

மக்கள் கணிப்பு தான் வெற்றி பெறும்: டி.டி.வி. தினகரன்

மக்கள் கணிப்பு தான் வெற்றி பெறும் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை அவனியாபுரத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் தேசிய ஜனநாய... மேலும் பார்க்க

தேனியில் என்கவுன்ட்டர்: காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் மரணம்!

தேனி: தேனி அருகே உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல் துறை அதிகாரிகள் இன்று(மார்ச் 29) சுட்டுப் பிடிக்க முற்பட்டதில் அந்த நபர் உயிரிழந்தார்... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு அனுமதிப்பதில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்

வயநாடு: நாடாளுமன்ற நிகழ்வுகளை ஆளுங்கட்சியே முடக்க நினைக்கிறது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையான விமர்சனத்தை சுமத்தியுள்ளார். கேரளத்திலுள்ள தமது சொந்த தொகுதியான வயநாட்ட... மேலும் பார்க்க

திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?

பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் தங்களை அங்கீகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில்எடப்பாடி பழனிசாமி இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசினார்.... மேலும் பார்க்க

2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

2026-ல் யார் தமிழக முதல்வராக வாய்ப்புள்ளது? என சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிக... மேலும் பார்க்க