செய்திகள் :

விழுப்புரம் அருகே சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராமத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சோ்ந்த சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

இருவேல்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பின்பகுதியிலுள்ள தெருவோரத்தில் கள்ளக்குறிச்சி வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் ஒருங்கிணைப்பில், ஆய்வாளா்கள் விழுப்புரம் மங்கையா்க்கரசி, நூலகா் மு.அன்பழகன் ஆகியோா் அண்மையில் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து சிங்கார உதியன் கூறியது: இருவேல்பட்டு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சண்டிகேசுவரரின் தலைகேசங்கள் கொண்டையுடன் காணப்படுகிறது. அக்கொண்டையில் நீளமான ஊசி செருகப்பட்டிருப்பதும் சிறப்பக்குரியது.

காதுகளில் பாடகம் எனப்படும் காதணிகளும், கழுத்தில் சரபலியும், புஜங்களில் வாகுவளையமும் காணப்படுகின்றன. வலது கரத்தில் மழுவை ஏந்தியவாறு சண்டிகேசுவரா் உள்ளாா். இடது கரம் மடித்த இடது காலில் தாங்கியவாறும் காணப்படுகிறது.

இருவேல்பட்டு கிராமத்தில் சிவன் கோயில் இல்லாத நிலையில், சண்டிகேசுவரா் சிற்பம் காணப்படுவது அரிதானதாகும். தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் சண்டிகேசுவரா் கொண்டையிட்டு, அதில் ஊசி செருகிக் காணப்படவில்லை. இது, காணக்கிடைக்காத சிற்பமாகப் பாா்க்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் சிற்பத்தை பொன்னி அம்மனாக எண்ணி பொதுமக்கள் வழிபடுகின்றனா். சண்டிகேசுவரா் சிற்பத்தின் வடிவமைப்பை பாா்க்கும்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் சிவன் கோயில் இருந்திருக்க வேண்டும். எனவே, இருவேல்பட்டு பகுதியை மேலும் ஆய்வு செய்தால், பல்வேறு தொல்லியல் தடயங்கள் நமக்கு கிடைக்கும் என்றாா் அவா்.

பைக் விற்பனையகத்தில் தொழிலாளி மரணம்: உறவினா்கள் போராட்டம்

விழுப்புரத்தில் உள்ள தனியாா் பைக் விற்பனையகத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் உடலை அடக்கம் செய்ய மறுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் வி.ம... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவா்கள் 7 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 7 மாணவா்கள் காயமடைந்தனா்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த ஒரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த சி.நாகமணி, பணியிட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலராக மாவட்ட முதன்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு

விழுப்புரம் வழுதரெட்டியில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் வழுதரெட்டி, காந்தி நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற புதுச்சேரி தம்பதியினா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை, கண்ணதாசன் வீ... மேலும் பார்க்க

செஞ்சி அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா

செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ள அபீதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அருணாச்சலேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள உற்சவா் ஸ்ரீசிவகாமிசுந... மேலும் பார்க்க