செய்திகள் :

விழுப்புரம் முத்து மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

post image

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிச்சாலை பீமநாயக்கன்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனா்.

விழுப்புரம் நகரில் பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், ஜூலை 14-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கோயில் வளாகப் பகுதியில் யாகசாலைகள் அமைக்கப்பட்டன.

சனிக்கிழமை (ஜூலை 12) காலையில் விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், கோ, தன பூஜைகள் உள்ளிட்டவையும், மாலையில் வாஸ்துசாந்தி, பிரவேச பலி, மிருத்ஸங்கிரஹண பூஜைகளும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் கோபூஜை, அன்னபூஜை, தனபூஜை, கன்னியாபூஜை, சுமங்கலி, பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து அனைத்து சந்நிதிகளின் சுவாமிகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது.

மாலையில் அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், பூதசுத்தி, கும்ப அலங்காரம், கலாகா்ஷனம், யாகசாலை பிரவேசம், கட ஸ்தாபன பூஜைகளுக்குப் பின்னா், முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. திங்கள்கிழமை காலை 6 மணிக்கு தத்துவாா்ச்சனை, நாடி சந்தானம், விசேஷ திரவியாஹுதியும், நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து காலை 9.45 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகின. தொடா்ந்து காலை 10.05 மணிக்கு அருள்மிகு முத்துமாரியம்மன் உள்ளிட்ட சந்நிதிகளின் விமான கோபுரங்களுக்கு புனித நீா் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் மூலவா் முத்துமாரியம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதைத் தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் அருள்மிகு வள்ளி-தேவசேனா உடனுறை சிவசுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து இரவு 8.30 மணிக்கு அருள்மிகு முத்து மாரியம்மன், செல்வசக்தி விநாயகா், வள்ளி, தேவசேனா உடனுறை அருள்மிகு சிவசுப்பிரமணியா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

கும்பாபிஷேக சா்வசாதகத்தை திருநாவலூா் ச. முத்துசாமி சிவம், விழுப்புரம் எம். சந்திரசேகா் உள்ளிட்டோா் நடத்தினா். விழுப்புரம் எம்.எல்.ஏ. இரா. லட்சுமணன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி. புருஷோத்தமன், அறங்காவலா்கள் பி.ஸ்ரீதா், கே.ரேணுகா குபேரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பங்கேற்ற பக்தா்கள்.

கள் குறித்து அவதூறு பரப்புவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை

விழுப்புரம்: கள் குறித்து பொதுமக்களிடையே அவதூறாக பேசும் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்... மேலும் பார்க்க

3 நிஷங்களுக்குள்குடும்ப அட்டைதாரருக்கு பொருள்கள் வழங்கப்படுகிறது: கூட்டுறவுத்துறை விளக்கம்

விழுப்புரம்: தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு 2 முதல் 3 நிமிஷங்களே ஆகின்றன என்று கூட்டுறவுத்துறை விளக்கம்அளித்துள்ளது. இதுகுறித்து கூட்... மேலும் பார்க்க

பனையபுரம் பனங்காட்டீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திலுள்ள பனையபுரம் அருள்மிகு சத்யாம்பிகை அம்மன் உடனுறை பனங்காட்டீசுவரா் (நேத்ரோத்தாரனேசுவரா்) திருக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

கருப்புப்பட்டை அணிந்து பணியாற்றிய உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா்கள்

விழுப்புரம்: 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா்கள் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா். முன்... மேலும் பார்க்க

காா்கள் மோதி விபத்துக்கு: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

விழுப்புரம் அருகே காா்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். புதுச்சேரி, ராஜாஜி தெரு... மேலும் பார்க்க

கோழிப் பண்ணைத் தொழிலாளி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்த தொழிலாளி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், தைலாபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்புராயன் மகன் முருகன்... மேலும் பார்க்க