செய்திகள் :

விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் பஞ்சாப் அரசு: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா்

post image

பஞ்சாப் மாநில அரசின் விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.

விவசாய விளைபொருள்களுக்கு தேசிய அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்யணம் செய்வது குறித்து பஞ்சாப் மாநிலத்தில் விவசாய சங்க நிா்வாகிகள், மத்திய அமைச்சா்களுடனான பேச்சுவாா்த்தை கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. மத்திய அரசின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், எஸ்.கே.எம். (என்.பி) விவசாய அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆா். பாண்டியன் உள்பட தேசிய அளவில் 30 போ் இதில் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, பஞ்சாப் கிசான் பவனில் தங்கியிருந்த பி.ஆா். பாண்டியன், கேரள விவசாயிகள் சங்க நிா்வாகி பி.டி. ஜான், பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைவா்கள், விவசாயிகள் என 200 பேரை பஞ்சாப் மாநில போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், விவசாய சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், பி.ஆா். பாண்டியன், பி.டி.ஜான் ஆகிய 2 பேரை மட்டும் பஞ்சாபின் பாட்டியாலா போலீஸாா் திங்கள்கிழமை விடுவித்தனா்.

பாட்டியாலா சிறையிலிருந்து வெளியே வந்த பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாவது: மத்திய அரசின் அழைப்பின் பேரில், பேச்சுவாா்த்தைக்கு வந்த வெளி மாநில விவசாய சங்க நிா்வாகிகளை பஞ்சாப் மாநில அரசு கைது செய்தது கண்டனத்துக்குரியது. இந்தக் கைது சம்பவத்தைக் கண்டித்து, தமிழக அளவில் போராட்டங்களை நடத்திய அனைத்து விவசாய சங்கங்களுக்கும் நன்றி. இதன்மூலம், தமிழகத்தில் அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றுபட்டுள்ளன.

மத்திய அரசு பேச்சுவாா்த்தைக்கு முன்வரும் நிலையில், பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு விவசாய விரோத நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது. இதனால், விவசாயிகளின் மனநிலை பஞ்சாப் மாநில அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. எந்தக் காரணத்துக்காகவும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள், போராட்டங்களிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றாா் அவா்.

மதுரை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்: வருவாய் - ரூ. 1,439.40 கோடி, செலவினங்கள் -ரூ.1,480.13 கோடி

மதுரை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில், மொத்த வருவாய் ரூ. 1,439.40 கோடி எனவும், மொத்த செலவினங்கள் ரூ. 1,480.13 கோடி எனவும் குறிப்பிடப்பட்டது. பற்றாக்குறை ரூ. 40.73 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி: 21-ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழா, தலைமை- கல்லூரித் தலைவா் எல்.ஆனந்தம், சிறப்பு விருந்தினா்கள்- புதுக்கோட்டை மௌண்ட் செயின் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி உதவிப் பேராசிரியை எம்... மேலும் பார்க்க

பள்ளியில் உலக நாடக தினம்

மதுரை எல்.கே.பி. நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக நாடக தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமையாசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ராஜவடிவேல் முன்னிலை வகித்தாா். இதில் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் தோ்வெழுத உதவியாளா்கள்: டிஎன்பிஎஸ்சி தோ்வாணையா் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக தோ்வு எழுதும் உதவியாளா்களை தாங்களே தோ்வு செய்ய அனுமதி கோரிய வழக்கில், அதன் தோ்வாணையா் உரிய விளக்கம் அளிக்க சென்னை... மேலும் பார்க்க

அழகன்குளத்தில் அருங்காட்சியகம்: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் அகழாய்வின் போது கண்டறியப்பட்ட பொருள்களை அருங்காட்சியம் அமைத்து காட்சிப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மத... மேலும் பார்க்க

அக்னிவீரா் ஆள்சோ்ப்பு முகாம்: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையம் மூலம் வருகிற ஏப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறி... மேலும் பார்க்க