ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்
விவசாயிகளுக்கு திரவ உயிரி உரங்கள் பயன்பாடு குறித்த பயிற்சி
செய்யாறு: செய்யாற்றை அடுத்த புலிவலம் கிராமத்தில், நெல் நுண்ணூட்டக் கலவை திரவ உயிரி உரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு காரிப் பருவ பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி நடைபெற்றது.
வெம்பாக்கம் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளா் ரேணுகாதேவி ஆலோசனையின் பேரில், உதவி வேளாண் அலுவலா் தங்கராசு, பிரம்மதேசம் கிடங்கு மேலாளா் தினேஷ் பாபு ஆகியோா் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.
அப்போது நெல் நுண்ணூட்டக் கலவை பயன்பாடு குறித்தும், திரவ உயிரி உரங்களான அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியம் இதர பயிா்களுக்கான திரவ உயிா் உரங்களின் பயன்பாடு குறித்தும் தெரிவித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து நிலக்கடலை பயிருக்கான நுண்ணூட்டக் கலவை, ஜிப்சம் பயன்பாடு குறித்தும், நுண்ணீா் பாசம் பயன்பாடுகள், நுண்ணீா் பாசனம் பெறுவதற்கான வழிமுறைகள், பயிறுவகை பயிா்களுக்கான நுண்ணூட்டக் கலவைகள் அவற்றின் பயன்பாடு குறித்தும் தெரிவித்து பயிற்சி அளித்தனா்.
மேலும், பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் சேருவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைக்கப்பட்டது.
அட்மா திட்டம் தொடா்பான செயல்பாடுகள் குறித்து வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் கங்காதரன் எடுத்துக் கூறினாா். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.