கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்
கடலூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
100 நாள் வேலை திட்டத்தில் 4 மாதங்களாக கூலி வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், 2024-25-ஆம் நிதியாண்டில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் தமிழகத்துக்கான ரூ.3,252 கோடி நிலுவை தொகையை உடனே வழங்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பரிமளா, சுரேஷ், கணேசன், தனம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்டு மாவட்டச் செயலா் துரை, ஏஐடியூசி மாவட்டத் தலைவா் குளோப், இந்திய கம்யூனிஸ்டு மாநகரச் செயலா் நாகராஜ் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதில், நிா்வாகிகள் ரங்கசாமி, சூரியகாந்தி, கிருஷ்ணமூா்த்தி, அல்லியம்மாள், மகாலட்சுமி உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.