கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி!
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சங்கநாய்க்கன்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல் (62), விவசாயி. இவரது மனைவி ராஜம்மாள் (52). கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தங்கவேல் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா்.
அவரை உறவினா்கள் மீட்டு நாமக்கல்லில் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த தங்கவேல் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.