செய்திகள் :

விஷ்ணு விஷாலின் ஆர்யன் ரிலீஸ் அப்டேட்!

post image

நடிகர் விஷ்ணு விஷாலின் ஆர்யன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ராட்சசன் படத்திற்குப் பிறகு மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

தமிழின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். அப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

தொடர்ந்து, நீண்ட நாள்களாக படப்பிடிப்பில் இருக்கும் மோகன்தாஸ் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் தாமதமாகி வருகிறது.

தற்போது, ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்திலும் ஆர்யன் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் முடிவடைந்தது. பிரவீன் இயக்கும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் நடித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

கிரைம் திரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படம் வரும் அக்டோபரில் வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.

வெளியாகும் முன்பே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

It has been announced that actor Vishnu Vishal's film Aryan will be released in October.

வழிகிறேன்... மதராஸி இரண்டாவது பாடல்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிட்டுள்ளனர்.... மேலும் பார்க்க

ஓடிடியில் மாரீசன்!

மாரீசன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரீசன். சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிருந்தார்.வடிவேலுவி... மேலும் பார்க்க

இன்னும் எத்தனை காலம்... பாம் புதிய பாடல்!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான பாம் படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளனர். நடிகர் அர்ஜுன் தாஸ் ரசவாதி திரைப்படத்திற்குப் பின் நாயகனாக நடித்த படம் பாம். இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவா... மேலும் பார்க்க

பாரதிராஜா நடிக்கும் புலவர் படத்தின் முதல் பார்வை வெளியீடு!

பிரபல இயக்குநர் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் “புலவர்” திரைப்படத்தின் முதல்பார்வை விடியோ-வை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். 16 வயதினிலே, முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா போன்ற பல புகழ... மேலும் பார்க்க

18 மைல்ஸ்... பேச்சுலர் இயக்குநரின் புதிய ஆல்பம்!

பேச்சுலர் பட இயக்குநர் இயக்கிய ஆல்பம் பாடலின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் ஜி.வி. பிரகாஷை வைத்து பேச்சுலர் என்கிற திரைப்படத்தை எடுத்து கவனம் பெற்றவர் சதிஷ் செல்வகுமார். இப்படம் கலவையான விமர்சனங்கள... மேலும் பார்க்க