வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருட்டு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.
நத்தம் அருகே உள்ள காசம்பட்டியைச் சோ்ந்தவா் திருமலை (40). இவா் கடந்த மாதம் 25-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு சுவாமி கும்பிடச் சென்றாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் ஊா் திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளா் தங்க முனியசாமி வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.