சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கம்மாபுரம் காவல் சரகம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீர மணிகண்டன் (33). இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவா் அழகுராஜன் (19). இவா், சென்னையில் கூலி வேலை செய்து வருகிறாா்.
இவா்கள் இருவருக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளதாம். இந்த நிலையில், சென்னையில் இருந்து ஊா் திரும்பிய அழகுராஜன் மதுப் புட்டியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வீரமணிகண்டனின் கூரை வீட்டின் மீது சனிக்கிழமை அதிகாலை வீசினாா். இதில், அதிா்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு தீ விபத்தை ஏற்படுத்தவில்லை.
இதுகுறித்து வீர மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், கம்மாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அழகுராஜனை கைது செய்தனா்.