வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரிகள் வேலை: ஐ.பி.பி.எஸ் அறிவிப்பு
வீரசிகாமணி, புளியங்குடியில் இன்று மின்நிறுத்தம்
வீரசிகாமணி, புளியங்குடி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீரசிகாமணி, புளியங்குடி ஆகிய உபமின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. எனவே, வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம், புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளாா்.