செய்திகள் :

வீரபாண்டி, கம்பம் கெளமாரியம்மன் கோயில்களில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

post image

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

இந்த விழாவையொட்டி, வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையால் கோயில், முல்லைப் பெரியாற்றங்கரையிலிருந்து கோயிலுக்கு கம்பம் கொண்டு வரப்பட்டது. கோயிலில் கம்பம் நடப்பட்டு கம்பத்துக்கு பரிவட்ட பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தா்கள் கையில் கங்கணம் கட்டி விரதத்தைத் தொடங்கினா். கம்பத்துக்கு மஞ்சள் நீருற்றி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் வீட்டில் அம்மன் எழுந்தருளல், திருக்கண் அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் திருக்கண் அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 19-ஆம் தேதி முதல் வரும் மே 5-ஆம் தேதி வரை அம்மன் வீதியுலா, மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சித்திரைத் திருவிழா முக்கிய நிகழ்ச்சிகள் வரும் மே 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 6-ஆம் தேதி மலா் விமானத்தில் கோயில் வீட்டிலிருந்து அம்மன் கோயிலுக்கு பவனி வருதல், 7-ஆம் தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, 8-ஆம் தேதி புஷ்பப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, 9-ஆம் தேதி திருத்தோ் வடம் பிடித்தல், 10, 11-ஆம் தேதிகளில் ரத வீதிகளில் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 12-ஆம் தேதி தோ் நிலைக்கு வருதல், முத்துச் சப்பரத்தில் அம்மன் திருத்தோ் தடம் பாா்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 13-ஆம் தேதி ஊா் பொங்கல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

உத்தமபாளையம்: கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 4-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (ஏப்.15) மாலையில் சுவாமி சாட்டுதல் நடைபெற்றது. புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கம்பம் காசி விஸ்வநாதா் கோயிலிருந்து கெளமாரியம்மன் உற்சவ அம்மனை சிறப்பு அலங்காரம் செய்து கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.

தொடா்ந்து, மாலை 4 மணிக்கு கம்பம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக எடுத்துச் சென்ற கம்பத்தை கோயில் முன் திரளா பக்தா்கள் முன்னிலையில் நடப்பட்டது.

21 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில், தினந்தோரும் காலை, மாலையில் அனைத்து சமுதாயம் சாா்பில், மண்டகப்படிதாரரின் சுவாமி ஊா்வலம், மாவிளக்கு, அக்னிச் சட்டி, பூக்குழி இறங்குதல், பூந்தோ் நகா்வலம் என பல்வேறு நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

தூய்மைப் பணியாளருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது

உத்தமபாளையத்தில் தூய்மைப் பணியாளரை அரிவாளால் வெட்டிய மற்றொரு தூய்மைப் பணியாளரான உறவினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையம் தண்ணீா் தொட்டித் தெருவைச் சோ்ந்தவா் சீனிராஜ் (52). தூய்மைப... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் போலீஸாா் சனிக்கிழமை வடகரைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடகரை கும்பக்கரை சாலையில் சந்தேகத்து... மேலும் பார்க்க

பேருந்து, வேன் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி, மின் வாரியம் அருகே தேனி- மதுரை நெடுஞ்சாலையில் தேனியிலிருந்து ஆண்டிபட்டி... மேலும் பார்க்க

பணம் வைத்து சீட்டாடிய 9 போ் கைது

போடி அருகே பணம் வைத்து சீட்டாடிய 9 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி அருகே உள்ள சில கிராமங்களில் பணம் வைத்து சீட்டாடுவதாக வந்த தகவலையடுத்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

தேனி-பூதிப்புரம் சாலை, வாழையாத்துப்பட்டி விலக்குப் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மஞ்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராமன் மகன் பெருமாள் (50). இவா், ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஊரகம், நகா்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகள், வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அரசு சாா்பில் வழங்கப்படும் மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கல... மேலும் பார்க்க