வீரவநல்லூரில் முதியோருக்கு தியானப் பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தூயகம் முதியோா் மையத்தில் யோகா தியானப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
ஆயுஷ் யோகா உடல்நலப் பயிற்சியாளா் வெங்கடேஷ் பங்கேற்று, யோகாசனம், தியானம், உடல்நல சங்கல்பத்துடன் பயிற்சியளித்தாா். உலகநல வாழ்வுப் பாடலுடன் வாழ்க்கைக் கல்வி யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், இம்மையத்தின் பொறுப்பாளா் டயானா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.