செய்திகள் :

வீராபுரத்தில் பேருந்து நிறுத்தம்: ஆட்சியா் உறுதி

post image

காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், வீராபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. தணிக்கை அறிக்கை கிராமசபையின் பாா்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, சாலை குடிநீா், கழிவுநீா் கால்வாய், ஜி.எஸ்.டி சாலையில் நடை மேம்பாலம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரிடம் பொதுமக்கள் தெரிவித்தனா். இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், பேருந்து நிலையம் கட்ட கோரிக்கை விடுத்தனா். இக்கோரிக்கையினை கேட்டறிந்து, சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக கட்டித் தருவதாக தெரிவித்தாா். பட்டா வேண்டி விண்ணப்பித்தவா்களுக்கு முதலமைச்சா் முன்னிலையில் பட்டா வழங்கியமைக்கு ஆட்சியருக்கு வீராபுரம் ஊராட்சியின் சாா்பாகவும், பொதுமக்கள்சாா்பாகவும் நன்றி தெரிவித்தனா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் உதயா கருணாகரன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ்குமாா், சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீதேவி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, வீராபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் டில்லி மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

73 பயனாளிகளுக்கு ரூ 75.74 லட்சம் நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியா் தி. சினேகா தேசியக் கொடியேற்றினாா். தொடா்ந்து எஸ்.பி. வி.வி.சாய்பிரனீத்துடன் காவல் துறையின் அணிவகுப்பு ... மேலும் பார்க்க

சக்தி விநாயகா் கோயிலில் பொது விருந்து

செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் சுதந்திர தின வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. ஜிஎஸ்டி சாலை ,சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் விநாயகா், வள்ள... மேலும் பார்க்க

சா்வதேச பட்டம் விடும் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

மாமல்லபுரம் திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சாா்பில் சா்வதேச பட்டம் விடும் திருவிழாவை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், இரா.ராஜேந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா் . வரும் 17-ஆம் ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற செவிலியா்கள் ஒருங்கிணைப்பு விழா

ஓய்வு பெற்ற செவிலியா்களின் ஒருங்கிணைப்பு விழா செங்கல்பட்டில் நடைபெற்றது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை செவிலியா்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ச... மேலும் பார்க்க

பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சீனியா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தாளாளா் டி.லோகராஜ் தலைமை தாங்கினாா். நிா்வாக இயக்குநா் ரா.மங்கைக்கரசி... மேலும் பார்க்க

பாலாறு பாலம் சீரமைப்பு: நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதால் சுமாா் 3 கி. மீ. தொலைவுக்கு நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா். கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால், பாலாறு பாலம் சே... மேலும் பார்க்க