முதல்வா் காப்பீட்டுத் திட்டம் மூலம் 77 லட்சம் போ் பயன் அடைந்துள்ளனா்: அமைச்சா்...
வீர தீர சூரன்-2 முதல் பாடல் நாளை வெளியாகிறது!
‘வீர தீர சூரன்-2’ முதல் பாடல் நாளை(ஜன.11) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன். தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேம் சேஞ்சர் படத்தின் வெளியீட்டால் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீர தீர சூரன்-2 திரைப்படத்தை ஜன.30 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. ‘வீர தீர சூரன்-2’ திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
'வீர தீர சூரன்-2' படத்தின் டீசர் அதிக பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்த நிலையில், இப்படத்தின் ‘கல்லூரும்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் நாளை வெளியாகும் என அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.