Aaladippattiyan Success Story ? | 3 கன்டெய்னர்ல அல்வா கொண்டு வர்றோம் ? | Vikatan...
வெங்கடாசலபதி கோயில் ஆனி பிரம்மோத்ஸவத் திருவிழா கொடியேற்றம்
சாத்தூா் வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோத்ஸவத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு வெங்கடாசலபதிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் சாத்தூா், அதைச் சுற்றியுள்ள ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்தத் திருவிழா நடைபெறும் 12 நாள்களும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், குதிரை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாளிப்பாா். இந்தத் திருவிழாவின் 9-ஆம் நாளான ஜூலை 10-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
கொடியேற்றத்தை முன்னிட்டு திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.