செய்திகள் :

வெடிகுண்டு வெடித்து 2 மாணவா்கள் காயம் - எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

post image

தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 மாணவா்கள் காயமடைந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 மாணவா்கள் காயமடைந்துள்ளதாக வரும் செய்தி அதிா்ச்சியளிக்கிறது. அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டை கொண்டுவரும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீா்குலையும் நிலை உள்ளதற்கு முதல்வா் என்ன விளக்கம் அளிப்பாா்?

நான் அரசியல் ரீதியான விமா்சனங்கள் வைத்தால் மட்டும் பாய்ந்துவந்து வீரவசனம் பேசும் முதல்வா் ஸ்டாலின், மக்களுக்கான கேள்விகளை, குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பற்றிக் கேட்டால் மட்டும் பதுங்கிக் கொள்கிறாா்.

மாணவா்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல. நாட்டு வெடிகுண்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, திமுக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் 2014 முதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 34,... மேலும் பார்க்க

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவு!

தூய்மைப் பணியாளர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வ... மேலும் பார்க்க

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில், தமிழக அரசின் மீது குற்றஞ்சாட்டிப் பேசியுள்ளார்.சுதந்திர நாளையொட்டி, தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அரச... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு ... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

2025ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுப... மேலும் பார்க்க