வெண்மணி தியாகிகள் நினைவு தினம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் ஆரணியை அடுத்த பெரணமல்லூா் பகுதி மோசவாடி கிராமத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில், வெண்மணி தியாகிகள் 56-ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியேற்றி வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வட்டச் செயலா் அ.அப்துல்காதா் தலைமை வகித்தாா்.
நகரச் செயலா் ந.ராதகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினா் சுகுணா, மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலா் இரா.சரவணன், மாவட்ட துணைச் செயலா் ச.ரேணுகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆரணி:
பெரணமல்லூா் வட்டாரம், மோசவாடி கிராமத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த
நிகழ்வில் கட்சியின் வட்டாரச் செயலா் ந.பிரபாகரன் தலைமை வகித்தாா். வ.பழனி வரவேற்றாா்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பெரணமல்லூா் சேகரன் கட்சிக் கொடியேற்றி வெண்மணித் தியாகிகளின் வீரவரலாறு மற்றும் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு, அகில இந்திய மாநாடு குறித்துப் பேசினாா்.
இடைக் குழு உறுப்பினா்கள் இரா.ராஜசேகரன், மா.கௌதம்முத்து, சந்திரிகா, ஜி.அறிவழகன் மற்றும் கிளைச் செயலா் கே.பெருமாள் உள்ளிட்டோா் வெண்மணி தியாகிகள் ஸ்தூபிக்கு மரியாதை செலுத்தினா். இடைக் குழு உறுப்பினா் பி.கே.முருகன் நன்றி கூறினாா்.