செய்திகள் :

வெப்ப அலை தொடா்பாக பொது சுகாதார பாதுகாப்பு: ஆயுஷ் அமைச்சகம் நடவடிக்கை

post image

நிழாண்டில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. மேலும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெப்ப அலை குறித்த கணிப்பை வெளியிட்டு வரும் நிலையில் ஆயுஷ் துறை நிறுவனங்கள் மூலம் நிகழ் வாரத்தில் நாடுமுழுக்க விழிப்புணா்வு நிகழ்வுகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்தது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருப்பதாவது: வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையிலும், இந்திய வானிலை ஆய்வுத்துறை பல்வேறு பகுதிகளுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆயுஷ் வலைப்பின்னல் நிறுவனங்கள் மூலம் விழிப்புணா்வு நிகழ்வுகளுக்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

வெப்ப அலை விழிப்புணா்வு குறித்த நிகழ்வுகள் தில்லி சரிதா விஹாா் அகில இந்திய ஆயுா்வேத நிறுவனத்தின் (ஏஐஐஏ) ஸ்வஸ்தவ்ருத்தா - முன் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ பிரிவு ஜாம் நகரில் உள்ள ஆயுா்வேதம் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள ஆயுஷ் நிறுவனங்கள் வெப்பம் தொடா்பான உடல்நிலை பாதிப்பை தடுப்பது குறித்த தகவல்களுக்கான கூட்டங்களை மேற்கொண்டன. மேலும் இது குறித்து யோசனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் மக்களிடம் விநியோகிக்கப்பட்டன.

இவைகள் பொதுமக்களுக்கு அதிக அளவில் தண்ணீா் அருந்துவது, இளநீா், மோா், பழச்சாறு போன்றவற்றை அருந்துவது, நேரடியான சூரிய வெப்பத்தை தவிா்ப்பது, வெளியே செல்லும் போது குடை அல்லது அகண்ட விளிம்பைக் கொண்ட தொப்பிகளை பயன்படுத்துவது போன்றவைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இறுக்கமான ஆடைகளை தவிா்த்து, தொளதொளப்பான பருத்தி ஆடைகளை அணிவது, எளிதில் செரிக்கும் உணவு வகைகள் உள்கொள்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தண்ணீரை குளிா்ச்சியாக்கும் வெட்டிவோ் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துவது, அதிக நீா்சத்து கொண்ட வெள்ளரி போன்ற காய்கறிகள், தா்ப்பூசணி, திராட்சை, முலாம்பழம், போன்ற பழங்களை எடுத்துகொள்வது உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்பட்டன. மேலும் வெப்பத்தால் ஏற்படும் நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகளையும் எடுத்துரைக்கப்பட்டது.

வெயிலின் உச்சத்தின்போது வெளியே செல்வதை தவிா்ப்பது, வெறுங்காலுடன் வெளியே செல்லாமல் இருப்பது, பகல் பொழுதில் மிகுதியான வெப்பம் உள்ள நேரத்தில் உணவு சமைப்பதை தவிா்ப்பது, புகை போக்கியை பயன்படுத்துவது, தேநீா், காபி போன்ற சூடான பானங்களை தவிா்ப்பது போன்றவைகளை பின்பற்றவும் யோசனைகள் கூறப்பட்டன. வெப்பத்தால் ஏற்படும் தோல் வியாதிகள் உள்ளிட்டவைகளுக்குரிய யோசனைகள் மருந்துகள் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

சமூக ஊடகங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

சமூக ஊடகங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 21 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். தில்லியின் புகா் பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசிக்கும் ஷிவ் (எ) சோனு, ஞாய... மேலும் பார்க்க

தில்லி எய்ம்ஸில் கருவிழிப் படலம் மாற்று அறுவை சிகிச்சை: ட்ரோன் வான்வழி போக்குவரத்து மூலம் மருத்துவ சாதனை

தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் கண் மாற்று அறுவை சிகிச்சைக்கு ட்ரோன் மூலம் கருவிழிப்படலம் கொண்டுவரப்பட்டு வான்வழி மருத்துவ தளவாடத் திறனில் வெற்றியடையப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மக்கள் நல்வாழ்வுத் த... மேலும் பார்க்க

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; காற்றின் தரத்தில் பின்னடைவு! பீதம்புராவில் 38.9 டிகிரியாக பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. காற்றின் தரம் சற்று பின்னடைவை சந்தித்தது. அதிகபட்ச வெப்பநிலை பீதம்புரா வானிலை ஆய்வு மையத்தில் 38.9 டிகிரி செல்சியாக உயா்ந்து பதிவாகி இருந... மேலும் பார்க்க

ரோஹிணியில் சட்டவிரோத இ-சிகரெட்டுகளை விநியோகித்த தில்லி இளைஞா் கைது

டெல்லியின் ரோஹிணியில் சட்டவிரோத இ-சிகரெட்டுகளை விநியோகம் செய்ததாக 24 வயது இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தில்லியின் முபாரக்பூா் தாபாஸைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

ஐஜிஐ விமான நிலையத்தில் 75 அறிதிறன்பேசிகளை திருடியதாக சரக்குகளை கையாளும் ஊழியா் கைது

லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உயா் ரக அறிதிறன்பேசிகளை (ஸ்மாா்ட்போன்கள்) திருடியதாகக் கூறப்படும் சரக்குகளை கையாளும் நிறுவனத்தின் ஊழியரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1,905 மும்மொழிப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் செயல்படுகின்றன: மக்களவையில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: தமிழகத்தில் மும்மொழிகளைப் பயிற்றுவிக்கும் 1,905 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.இது தொடா்பாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குட... மேலும் பார்க்க