செய்திகள் :

வெளிநாட்டிலிருந்து நிவாரண நிதி: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை - உறுதி செய்த உயர் நீதிமன்றம்

post image

வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 1997-ல் வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்தது.

High Court

இந்த வழக்கில் ஜவாஹிருல்லா-வுக்கு ஓரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கு 1 ஆண்டு சிறையும், எஸ் சையத் நிசார் அகமத், ஜிஎம் ஷேக் மற்றும் நல்ல முகமத் கலஞ்சிம் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜவஹருல்லா உள்ளிட்டோர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்றது .

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கீழ் நீதிமன்றம் விதித்து தண்டனை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார். மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீட்டுக்காக தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

FSO பதவி: `கூடுதல் தகுதியைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்ய முடியாது' - உச்ச நீதிமன்றம் உத்தரவு

`குறிப்பிட்ட பணியில் இணைய, தேவையான தகுதி என பரிந்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிகம் கற்ற நபரை அவரது கல்வித்தகுதியை மட்டுமே காரணமாக காட்டி பணியில் இணைக்காமல் நிராகரிக்க கூடாது' என்று உச்சநீதிமன்றம... மேலும் பார்க்க

சென்னை வேல் யாத்திரை: `தெளிவான உத்தரவு; தலையிட விரும்பவில்லை’ - மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம்

இந்து கடவுளான முருகனின் கோயில் அமைந்துள்ள மதுரை திருப்பரங்குன்றம் மலையை, அங்குள்ள இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடுவதாகவும், அந்த மலையை காக்கும் வகையில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்க கோரி பார... மேலும் பார்க்க

`ரூ.1 லட்சம் இழப்பீடு' - மகப்பேறு விடுப்பு மறுத்த மாவட்ட நீதிபதியை கண்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கணவர் 2020-ல் மரணமடைந்துவிட, கடந்த 2024-ல் மறுமணம் செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் மகப்பே... மேலும் பார்க்க

டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்; காட்டிக்கொடுத்த தீ விபத்து - கொலிஜியம் முடிவு?

உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி யஸ்வந்த் வர்மாவை திடீரென அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவெடுத்துள்ளது. நீதிபதியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கட... மேலும் பார்க்க

`மனைவி ஆபாச படங்களை பார்ப்பதை குற்றமாகக் கருத இயலாது!'- கணவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை

`மனுதாரரின் மனைவி சுய இன்பம் செய்வதை விவாகரத்துக்கான காரணமாக ஏற்க இயலாது.' என்று விவாகரத்து கேட்டு தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்து.கணவன் - மனைவி பிரச்னைகரூரைச் சேர்ந்... மேலும் பார்க்க

`இது பாலியல் வன்கொடுமை முயற்சியாகாது' - சிறுமி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து தற்போது விவாதமாகி உள்ளது.உத்தரப்பிரதேசத்தில் உள்ள கஸ்கஞ் என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பவன், ஆகாஷ் ஆகியோர் த... மேலும் பார்க்க