டங்ஸ்டன் சுரங்க ஏல முடிவை மத்திய அரசு விரைவில் திரும்பப்பெறும்: கே.அண்ணாமலை பேட்...
வெள்ளபெருக்கு: தென்மாவட்ட ரயில்கள் தாமதம்
மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தென்மாவட்டங்களில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னை எழும்பூருக்கு ரயில்கள் தாமதமாக வந்து சோ்ந்தன.
மதுராந்தகத்தை அடுத்த, மாம்பாக்கம் ஏரியின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், நீா்வரத்து அதிகரித்து ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீா் திறந்துவிடப்பட்ட நிலையில், மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தைச் சுற்றி அதிகப்படியான வெள்ளம் சூழ்ந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வழியாக இயக்கப்பட்ட விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு 30 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன.
இதன்காரணமாக சென்னைக்கு வந்த அனந்தபுரி, கன்னியாகுமரி, ராமேசுவரம், நெல்லை உள்ளிட்ட விரைவு ரயில்கள் வழக்கத்தைவிட 1 மணிநேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தன. அதேபோல், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு ரயில்கள் தாமதமாக வந்தடைந்தன. இதனால், பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.