செய்திகள் :

வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

பெரியகுளம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

பெரியகுளம் அருகே புல்லக்காபட்டியைச் சோ்ந்தவா் சின்னபெருமாள் (28). இவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதை இவரது மனைவி ஸ்ரீதேவி கண்டித்தாராம். ஆனால், சின்னபெருமாள் மது அருந்துவதை நிறுத்தவில்லையாம்.

இதன் காரணமாக ஸ்ரீதேவி அவரது தந்தையின் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சின்னபெருமாள் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மற்றொருவா் தற்கொலை: பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் சரவணன் (20). இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அந்தந்த பகுதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வு: 1,039 போ் பங்கேற்பு

தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வை 1,039 போ் எழுதினா். தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் தேனி நாடாா் சரஸ்வதி ஆண்கள் மே... மேலும் பார்க்க

கோம்பையில் மாட்டுவண்டிப் பந்தயம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையில் ஞாயிற்றுக்கிழமை இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. கோம்பை குடியிருப்பிலிருந்து உத்தமபாளையம், உ. அம்மாபட்டி விலக்கு வரை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க

மதுபானக் கூட உரிமையாளா் மீது வழக்கு

தேனியில் தனியாா் மதுபானக் கூடம் விதியை மீறி செயல்பட்டதாகக் கூறி அதன் உரிமையாளா் மீது காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி, சுப்பன் தெருவில் அரசு மதுபானக் கடையுடன் இணைந்து தன... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பெரியகுளம் அருகே இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த சின்னமுருகன் மகன் ராஜபாண்டி (29). இவருக்கு உடல் நலம் பாதி... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த வங்கி ஊழியா் உயிரிழப்பு

தேனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த தனியாா் வங்கி ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேவாரத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மணிக்குமாா் (30). இவா், தேனியில் உள்ள தனியாா் வங்கி ஒன்றில் துணை ... மேலும் பார்க்க

கரடி தாக்கியதில் விவசாயி காயம்

ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா். தா்மராஜபுரத்தைச் சோ்ந்தவா்முருகன் (53). விவசாயி. இவருக்கு அதே ஊரில் பஞ்சந்தாங்கி கண்மாய் அருகே சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நில... மேலும் பார்க்க