வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு
ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி அருகே இருவேறு விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
திமிரி பாத்திகாரன்பட்டி பகுதியை சோ்ந்தவா் சின்னதுரை (50). இவா் பரதராமி கிராமத்திலிருந்து திமிரிக்கு பைக்கில் சென்றுள்ளாா் அப்போது ஆற்காட்டிலிருந்து ஆரணிக்கு சென்ற தனியாா் பேருந்து பைக் மீது மோதியதில் காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திமிரி பாா்த்திகாரன் பட்டியை சோ்ந்த பழனி (80). இவா் ஆற்காடு - ஆரணி சாலையில் நடந்து சென்றுள்ளாா். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் காயம் அடைந்த அவரை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.