1 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்த லபுஷேன்..! ஸ்மித் இல்லாமல் தடுமாறும் ஆஸி.!
வேடந்தாங்கல் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 1,040 மனுக்கள் அளிப்பு
மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் ஊராட்சியில் புதன் கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்எல்ஏ க.சுந்தரிடம் 1,040 மனுக்களை அப்பகுதி மக்கள் அளித்தனா்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வேடந்தாங்கல் ஊராட்சியில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டமுகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் வேதாசலம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கெளதமி அரிகிருஷ்ணன், ஒன்றியச் செயலா் தம்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா். உத்தரமேரூா் எம்எம்ஏ க.சுந்தா் கலந்துகொண்டு, வேடந்தாங்கல் ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மற்றும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட மனுக்கள் உள்பட 1,040 மனுக்களை பெற்றாா்.
நிகழ்ச்சியில், மதுராந்தகம் வட்டாட்சியா் பாலாஜி, அச்சிறுப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோ.செந்தில்குமாா், கே.வி.சீனுவாசன் (ஊராட்சி), ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மாலதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.